Monday, 2 August 2021

ஏன் திருமண பரிசு கொடுக்கும் போது 101,1001 போன்று கொடுக்கிறோம்?

 


திருமணம் போன்ற நல்ல காரியங்களுக்கு நாம் பரிசு கொடுக்கும் போது 101, 1001 போன்று தான் கொடுக்கிறோம். நான் அடிக்கடி சிந்தித்தது உண்டு, ஏன் அந்த ஒரு ரூபாய் கொசுரு சேர்க்கிறோம்? அதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன?

அதை குறித்து ஆராய்ச்சி செய்ததில், தமிழர்களின் அழகான ஒரு தத்துவம் வெளிவந்தது. பணம் சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களிலும் மிகவும் வளர்ச்சியடைந்த முறைகளையும் விழுமங்களை கொண்டிருந்தனர் தமிழர். ஆங்கில மொழியில் பணம் சம்பந்தமான எல்லா சொற்களும் தமிழில் இருந்து பிறந்தது என்பது வியப்புக்குரிய செய்தி. காசு, மானியம், பங்கு போன்ற சொற்களை எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. Cash, money, bank என்று ஆங்கிலத்தில் உள்ளன.

தமிழர்களிடையே கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றிலும் இரண்டு பக்கமும் லாபம் வரும்படியாக முறைகளை அமைத்திருந்தனர். நல்ல காரியங்களுக்கு 100+1 என்று கொடுப்பார்கள். பரிசுத்தொகை வாங்கியவர், 100 ஐ தன்னிடம் வைத்துக்கொண்டு, ஒரு ருபாயை திரும்ப கொடுத்துவிடுவார் ! ஆக, இந்தப் பண கொடுக்கல்-வாங்கலில் ,வாங்கியவருக்கு லாபம் ரூ 100,கொடுத்தவருக்கு லாபம் ரூ 1! லாபக் கணக்கு இல்லாமல் எந்த பண சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையும் தமிழரிடையே நடப்பதில்லை.

. இதன் பின்னால் இவ்வாறு ஒரு கொள்கை இருப்பது புரியாமல், கொடுத்த 101 ஐயும் வரவில் வைத்துவிட்டு, வெறுங்கையோடு வந்தவரை திருப்பி போக வைத்தார்கள்,தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத சமூகத்தினர். பின்னர் அதுவே இப்போது பழக்கமாகி விட்டது.ஆக ,நல்லதொரு பழக்கம் அழிந்துவிட்டது. நாம் அதை திரும்பக் கொண்டுவர முயற்சிக்கலாம். நான் இதை என் வயதான ஒரு சித்தியிடம் இருந்து தான் கற்றேன். அவர்கள் என்னிடம் வாங்கிய பணம் திருப்பி தரும்போது, கட்டாயம் என்னிடமிருந்து ஒரு ரூபாய் கேட்டு வாங்கி விடுவார்கள்!